தர்மபுரி- திருவண்ணாமலை நான்கு வழிசாலை பணிக்காக தர்மபுரி மதிகோன்பாளையம் முதல் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியில் சாலை விரிவாக்க பணியும், மற்றொரு பகுதியில் வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் நடக்கிறது. எனவே இந்த சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்.