பெங்களூரு 80 அடி சாலையில் எம்.எஸ்.ராமையா ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி சாலையில் உள்ள நடைபாதையை பாதசாரிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையின் அருகே உள்ள மரங்களில் மின்கம்பிகள் தொங்கவிடப்பட்டுள்ளது.
இதனால் அடிக்கடி அந்த மின்கம்பிகள் பாதசாரிகள் மீது படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மீரான், 80 அடி சாலை, பெங்களூரு.