ஊட்டி எச்.எம்.டி. சாலை மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. பஸ் நிலையத்தில் இருந்து குன்னூர் சந்திப்பு சாலைக்கு செல்வதற்கு நகருக்குள் செல்லாமல் இந்த வழியாக சென்றால் சீக்கிரம் போகலாம் என்ற எண்ணத்தில் வரும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி தவிக்கின்றனர். இதேபோல் ரோஜா பூங்கா செல்லும் பயணிகளும் இந்த வழியாக சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றனர். எனவே இந்த சாலையை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.