சாலையில் கிடக்கும் ராட்சத குழாய்கள்

Update: 2022-07-11 15:56 GMT

பெங்களூரு எலகங்கா பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ேதாண்டப்பட்டுள்ளது. மேலும், சாலையின் ஓரங்களில் ராட்சத குழாய்கள் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்