விழுப்புரம் நகராட்சி 19-வது வார்டு சர்வேயர் நகர், இந்திராபிரியதர்ஷினி நகர், அரசு பெண்கள் கல்லூரி ஆகிய பகுதியில் உள்ள சாலைகள் சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகன ஒட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்த்து அதிகாரிகள் ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும்.