கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுவனூரிலிருந்து ராவத்தநல்லூர் செல்லும் சாலையில் புதிதாக தார்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. ஆனால் மேற்கொண்டு பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளாதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.