தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தையொட்டி வடக்கு பகுதியில் கிடங்குகள் அமைந்துள்ளன. இந்த கிடங்குகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் சரக்குகளை ஏற்றி இறக்கிவிட்டு செல்கின்றன. இந்த லாரிகள் செல்லும் தார் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சரக்கு வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.