கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் சின்னபனமுட்லு, அஞ்சூர், சந்தார பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.