முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆதிவாசி மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகள் தொடர் மழையால் விரிசல் அடைந்து உள்ளன. இதனால் அந்த வீடுகள் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக ஆதிவாசி மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை சீரமைத்து கொடுத்து, ஆதிவாசி மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு ஏற்றதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.