சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலை

Update: 2022-07-11 11:02 GMT

பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியில் வைண்ட் டானல் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது பெய்து வரும் மழையால் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்பவர்கள் சேற்றில் வாகனங்களை இறக்கினால் கீழே விழும் அபாயமும் உள்ளது. இதனால் அந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஸ்வின், எச்.ஏ.எல், பெங்களூரு.

மேலும் செய்திகள்