சாலையில் குழி

Update: 2022-09-03 11:08 GMT

கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். சாலை பகுதியில் இரு தனியார் மருத்துவமனைகளுக்கு இடையில் உள்ள சாலையில் 2 அடி ஆழத்துக்கு திடீரென குழி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். குறிப்பாக மழை பெய்யும் சமயத்தில் தண்ணீர் நிறைந்து குழி இருப்பது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள குழியை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்