ஊட்டியில் அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் சாலையில் மரங்கள் வெட்டப்பட்டன. அவை துண்டு துண்டாக அங்கேயே போடப்பட்டு உள்ளன. அவற்றை அப்புறப்படுத்தாமல் இருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.