சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-09-03 07:03 GMT

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பீச் ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலையை சீரமைத்து, மழை நீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதய்ரு, குளச்சல்.

மேலும் செய்திகள்