கொடைக்கானல் தாலுகா பாச்சலூர் ஊராட்சி நீலாங்கரை கிராமத்தில் ஒரு கி.மீ. தூரத்துக்கு மண் சாலை மழையால் முற்றிலும் உருக்குலைந்து விட்டது. பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக இருக்கிறது. பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் முறையான சாலை வசதி செய்து தருவார்களா?