குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-11 08:24 GMT

பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் இருந்து இந்திரா நகர் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் குழி இருப்பதே தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட கூடும். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்