தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி வழுதலைவட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு முறையான சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை மண்பாதை வழியாக சுமந்து செல்கின்றனர். இந்த நிலையில் மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் சேற்றில் நடந்தபடி இறந்தவர்களின் உடல்களை மிகுந்த சிரமத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்து செல்கின்றனர். மேலும், உடல்களை எடுத்து செல்லும் வாகனமும் சேற்றில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராமத்தில் உள்ள சுடுகாடுக்கு முறையான சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?