புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-09-01 13:15 GMT
பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு செங்கோல் நகர் எதிரே உள்ள ராயல் நகரில் உள்ள 2 தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்