பொள்ளாச்சி-ஆனைமலை மெயின் ரோட்டில் சீனிவாசபுரம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பாலம் உள்பட பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை ஆய்வு செய்து சீரமைக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.