தர்மபுரி நகரில் 4 ரோடு முதல் அரசு ஆஸ்பத்திரி வரை உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரவு நேரங்களில் மேற்கண்ட பகுதிகளில் சாலை மைய தடுப்பு சுவரில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் அவ்வப்போது எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இரவு நேரங்களில் தொடர்ந்து மின்விளக்குகள் எரிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், தர்மபுரி.