கோவை-பாலக்காடு சாலையில் குனியமுத்தூரில் இருந்து பி.கே.புதூர் வரை பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக குழிகள் தோண்டப்பட்ட பகுதிகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.