குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-30 16:48 GMT

திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குருக்களையன்பட்டியில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். வாகனங்களின் டயர்களை கற்கள் பதம் பார்த்து விடுகின்றன. எனவே சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும். 


மேலும் செய்திகள்