சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-30 15:17 GMT
தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் ராமாக்காள் ஏரி அருகே அரூர்,திருப்பத்தூர் பகுதிகளுக்கு செல்லும் சாலை பிரிகிறது. இந்தப் பகுதியில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் தார் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும்குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளார்கள். அதிக வாகன போக்குவரத்து உள்ள இங்கு சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், தர்மபுரி.

மேலும் செய்திகள்