சாலையில் பள்ளம்

Update: 2022-08-29 13:45 GMT

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் பாலசுப்பிரமணியம் மில் எதிரே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த பள்ளத்தில் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரத்தில் அங்கு பள்ளம் இருப்பது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபயாம் நிலவுகிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன், அந்த பள்ளத்தை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்