சென்னை வேளச்சேரி பிராமணன் தெருவில் உள்ள சாலையையொட்டி பள்ளம் ஒன்று விழுந்துள்ளது. தற்காலிகமாக இதை சரி செய்ய கட்டைகளை வைத்து மூடி வைத்துள்ளனர். இருப்பினும் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் தவறி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் விழுந்த பள்ளத்தை மூட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.