திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் சி.டி.என் நகர் 6-வது தெருவில் கடந்த 3 மாதங்களாக கழிவுநீர் சாலையில் தேங்கியநிலையில் இருக்கிறது. இப்பகுதியை பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மூக்கைப் பொத்திக்கொண்டு தான் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் தேங்கிய கழிவுநீரில் செல்லும் போது வழுக்கி விழவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.