குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-10 11:19 GMT

கோவை குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மழை பெய்து, சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், இரவு நேரத்தில் குழிகள் சரிவர தெரிவது இல்லை. இதனால் விபத்துகள் அதிகரிக்கிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது