தர்மபுரி- பாலக்கோடு சாலையில் பாப்பாரப்பட்டி பிரிவு சாலை அருகே ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பகல் நேரத்தில் எரிகின்றன. அதே சமயம் பல நாட்களில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரிவதில்லை. எனவே இதை முறைப்படுத்தி பகல் நேரத்தில் மின்விளக்குகள் எரிவதை தவித்து, இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.