அண்ணாகிராமம் ஒன்றியம் அம்மாப்பேட்டை அங்காளம்மன் கோவில் தெரு 7-வது வார்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.