சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2022-08-27 14:08 GMT
கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி-பட்டலங்காடு பிரிவு இடையேயான மலைப்பாதையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, சாலை தேசமடைந்தது. இதையடுத்து தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி, சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் அத்துடன் சாலை சீரமைப்பு பணி கைவிடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்