மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2022-08-27 13:21 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ராயக்கோட்டை மேம்பாலம், பெங்களூரு சாலை ரவுண்டானா  என பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிரமமாக உள்ளது. மழைநீர் சாக்கடை கால்வாய்களில் செல்ல வழியின்றி உள்ளது. எனவே மழைநீர் சாலைகளில் தேங்காமல் இருக்க மழைநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்