கோவையில் பல்வேறு சாலை பணிகள் தொடங்கப்படாமலும், முடிவடையாமலும் கிடக்கின்றன. குறிப்பாக மேற்கு புறவழிச்சாலை பணிகள் இதுவரை தொடங்கவில்லை. உக்கடம் முதல் ஆத்துப்பாலம், பெரியநாயக்கன்பாளையம் வரை மேம்பால பணிகள் முடிவடையாமல், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மேற்கு புறவழிச்சாலை பணிகளை தொடங்குவதோடு கோவை-பல்லடம் சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.