தர்மபுரி நகரின் மையப் பகுதியில் உள்ள சீனிவாசராவ் தெரு பகுதியில் கடைவீதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து தேர் முட்டி வரை உள்ள கான்கிரீட் சாலை பல்வேறு இடங்களில் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.