தேனி-தேவாரம் சாலையில் டொம்பச்சியம்மன் கண்மாயின் குறுக்காக கட்டப்பட்ட பாலத்தில் உள்ள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் விரிசல் பெரிதாகி பெரிய அளவில் பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்