விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் கடைத்தெரு மற்றும் காணை ஒன்றிய அலுவலகம் வரை உள்ள சாலையில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே இதை தடுக்க கட்டுப்பாடுகள் இன்றி செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் விதமாக அந்த பகுதியில் வேகத்தடை அமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.