பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திலி இருந்து தொடங்கி காமராஜர் வளைவு வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது, இதனால் இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வகையான வாகனங்களும் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது, மேலும் மழைக் காலங்களில் குழிகள் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து அவ்வபோது விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.