சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2022-07-09 09:36 GMT
மார்த்தாண்டம் அருகே குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதற்காக சாலையின் நடுவே தோண்டி குழாய்கள் பதித்தனர். பின்னர் தோண்டப்பட்ட பகுதியை சரியாக மூடி சீரமைக்காமல் தற்காலிகமாக மூடிவிட்டு சென்று விட்டனர். இதனால், அந்த பகுதியில் சாலை சேதமடைந்து வருகிறது. குறிப்பாக கொல்லகுளம், சாத்தச்சிவிளை பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், மார்த்தாண்டம்.

மேலும் செய்திகள்