திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் பல்லடம் ரோட்டையும், தாராபுரம் ரோட்டையும் இணைக்கும் 60 அடி ரோடு குழாய் பதிக்க குழிகள் தோண்டப்பட்டது. குழாய்பதித்த பின்னர் வாகனம் போக முடியாத அளவுக்கு மிகவும் குண்டும், குழியுகமாக உள்ளது. மேலும் முற்றிலும் மண் ரோடாக மாறி விட்டதால் சாலையில் வாகனம் செல்லும் போது புழுதி பறக்கிறது. எனவே குழியை சமன் செய்து தார் சாலை உடனே அமைக்க வேண்டும்.