ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லும் முக்கிய சாலை என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே சாலையை சீரமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.