பொருளாதாரத்தின் அடிதளம் தரமான சாலை. சாலை வசதி எங்கு இருக்கிறதோ அந்த நாடு நகரும் பொருளாதாரத்தில் மிளிரும். சாலை வசதி இல்லை நகரம், கிராமம் பொருளாதாரத்தில் பின்தங்கி விடும். நல்ல சாலைகள் என்றால் குறிப்பிட்ட இலக்கை குறித்த நேரத்தில் சென்றடைய முடியும். அதுபோல் சரக்குகளையும் கையாள முடியும். ஆனால் தரமற்ற குண்டும் குழியுமான சாலையால் எரி பொருள் வீணாவதோடு, கால விரையம் ஏற்படும். வீரபாண்டி-குப்பாண்டம்பாளையம் சாலையின் நடுவில் குழாய் பதிக்க தோண்டப்பட்டது. அதன்பின்னர் குழாய் பதித்த நிலையில் இன்னும் சாலை போடப்படவில்லை. எனவே விரைவில் சாலையின் நடுவே தார்சாலை அமைத்து இருபுறமும் உள் ள சாைலயை ஒருங்கிணைக்க வேண்டும்.