தர்மபுரி பூங்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடைகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் அதிக அளவில் அமைந்துள்ள இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பாதாள சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணியை விரைந்து முடித்து இந்த சாலையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.