கோவை மாதம்பட்டியில் உள்ள சாலையில் சிறிய அளவிலான வேகத்தடைகள் உள்ளன. இவை சாலையில் இருப்பது தெரிவது இல்லை. இதனால் அடிக்கடி அந்த சாலையில் இரவில் வாகன விபத்துகள் நடக்கிறது. தற்போது பெய்த மழைநீர், அந்த வேகத்தடைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே அந்த வேகத்தடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்தி விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.