வேலூர் மாநகராட்சி 54-வது வார்டு விருபாட்சிபுரம் ஜின்னுமுதலியார் முதல் தெருவில் பாதாள சாக்கடை பணி முடிந்துள்ளது. ஆனால் சாலையை இன்னும் சீரமைக்கவில்லை. பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. ஒரு சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் தூர்வார வில்லை. தடுப்புச்சுவர் உடைந்துள்ளது. சாலையை சீரமைக்கக் கோரி கடந்த ஒரு ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுநாள் வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எந்தவொரு பணியும் தொடங்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவில் சாலை மற்றும் கால்வாய் கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
-சு. கந்தவேல், வேலூர்.