நூலகத்தை திறப்பார்களா?

Update: 2022-08-10 11:19 GMT

வேலூர் மாநகராட்சி வார்டு எண்:1-க்கு உட்பட்ட செங்குட்டை ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சத்தில் 2015-2016ம் ஆண்டு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. மின் இணைப்பும் கொடுக்கப்படவில்லை. நூலக கட்டிடம் பகுதியில் குப்பை வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலக கட்டிடத்தை திறக்க வேண்டும்.

பி.துரை, கல்புதூர்

மேலும் செய்திகள்