திருவண்ணாமலை ஒன்றியம் பாவுப்பட்டு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அரசு தொடக்கப்பள்ளி அருகே ரூ.15 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டன. அதை, இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. கட்டிடங்கள் சேதம் அடைந்து வருகிறது. சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிவா, பாவுப்பட்டு