சுத்தமில்லாத சுகாதார வளாகம்

Update: 2022-07-27 16:54 GMT

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பஸ் நிலையத்தில் தண்டராம்பட்டு பஸ்கள் நிற்கும் பகுதியில் ஆண்கள், பெண்களுக்கான இலவச சிறுநீர் கழிவறை உள்ளது.

இந்தச் சுகாதார வளாகம் சுத்தமின்றி துர்நாற்றம் வீசுகிறது. அதை, பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சுத்தமாக வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்