தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-07-22 14:03 GMT

கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் கூட்ரோடு திருவண்ணாமலை மெயின்ரோடு பகுதியில் உள்ளது. இங்கு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

சிறிய பாலத்தை சற்று பெரிய பாலமாக கட்ட சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டினர். பாலம் கட்டும் பணி காலதாமதமாக நடந்து வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது.

அந்தச் செய்தி எதிரொலியால் பாலம் கட்டும் பணி தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.

-கார்த்தி, கண்ணமங்கலம்

மேலும் செய்திகள்