பழனி தாலுகா அ.கலையம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாபுரத்தில் கிராமப்புற நூலகம் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த நூலக கட்டிடம் தற்போது துணை சுகாதார நிலையமாகவும், அருகில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறையாகவும் மாற்றியுள்ளனர். இதனால் நூலகம் செயல்பட்டதற்கான அடையாளமே தெரியாமல் போய்விட்டது. எனவே மீண்டும் நூலகம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.