பழனி குரும்பப்பட்டி அரசமரம் அருகே உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.