அரியலூர் நகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் உள்ள பல பகுதிகளிலும் கொசுக்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. முக்கியமாக மேலத்தெரு, அரண்மனைத்தெரு, சடையப்பர் தெரு, மார்க்கெட் தெரு, புது மார்க்கெட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கொசுக்கள் தொல்லை உள்ளது. எனவே இந்த பகுதிகளில் போதுமான அளவில் கொசு மருந்து அடித்து கொசு பரவலை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.