அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமம் காலனி தெருவில் அதிக அளவில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு கடுமையான தொல்லை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின் வழியாக சீனிவாசபுரத்திற்கு செல்வோரை நாய்கள் அடிக்கடி கடிப்பதுடன், துரத்திச் செல்வதால் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களில் செல்வோர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.